மனிதர்களுக்கு, பொருள்களுக்கு எல்லாம் எப்படிக் காலாவதி தினம் என்ற ஒன்று வருகிறதோ அப்படித்தான் போலிருக்கிறது, பாரம்பரியம் மிக்க இயக்கங்களுக்கும். கட்டுறுதி மிக்க, வலுவும் வீரியமும் உள்ள, மக்களைக் கவர்ந்திழுத்துத் தம் பக்கம் தக்க வைத்துக்கொள்ளும் சாதுர்யம் மிக்கதொரு தலைமை இல்லாமல் காங்கிரஸ் என்னும்...
இதழ் தொகுப்பு 8 months ago
காதால் கேட்பதும் பொய் “இது எப்டிடா உனக்குப் புரியுது? இவ்ளவு ஃபாஸ்ட்டா பேசுது…” முருகானந்தத்தின் காதுகளில் இருந்த ஹெட்போனைத் தன் காதுகளுக்கு மாற்றிச் சிலவிநாடிகள் கேட்டபின் ஆண்டனிக்கு இந்தச் சந்தேகம் வந்தது. இருவரும் எம்.ஏ. சோஷியாலஜி முதலாண்டு மாணவர்கள். முருகானந்தம் இருக்குமிடம் எப்போதும்...
1 .40 பில்லியின். ஜனவரி 17 ஆம் தேதிப்படி சீனாவின் மக்கள் தொகை. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மில்லியன் குறைவு. ஒரு காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த திணறிய அதே சீனாவில் தான் இப்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஜனத்தொகை சரிந்து வருகிறது. குழந்தை பிறப்பு விகிதமும்...
மகிந்த ராஜபக்சே, சந்திரிக்கா ஆட்சியில் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு மூலையில் போட்டு வைக்கும் வெறும் தும்புத்தடி போலத்தான் இருந்தார். தேர்தல்களில் வெல்ல வெறும் பிரசாரப் பீரங்கியாய் பயன்படுத்தப்படுவார். மற்றையக் காலங்களில் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது. தான் எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி...
88. விதியுடன் சந்திப்பு பிரிவினைக் காலகட்டத்தில் டெல்லியின் நிலைமை என்ன? தலைநகர் டெல்லியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. மேற்குப் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கில் அகதிகள் டெல்லிக்கு வந்து குவிந்தார்கள். அதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது. அகதிகளாக வந்தவர்கள் பாகிஸ்தானில் தங்களுக்கு நேர்ந்த...
16 – சுவரால் தகர்ந்த நம்பிக்கை நாள்: 9 – நவ – 1989. இடம்: கிழக்கு ஜெர்மனி. நிகழ்ச்சி: குண்டெர் ஷபாவ்ஸ்கியின் செய்தியாளர் சந்திப்பு. “பெர்லின் சுவரின் அனைத்து சோதனைச் சாவடிகள் வழியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கிடையே நிரந்தரமாக இடம்பெயர்ந்துக் கொள்ளலாம்.” என்று...
பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டுக்குள் நம்மைத் தனிமைப்படுத்தவே அரசுகள் பெரும்பாடுபட்டன. கடுமையான சட்டங்கள் மூலம் தன் நாட்டையும் மக்களையும் வடகொரியா தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. கெடுபிடிகளை மீறித் தென்கொரியாவின் படங்களைப் பார்த்தார்கள், பாப் இசையைக் கேட்டார்கள் என்று பதின்ம வயது இளைஞர்கள்...
85 ஆளுக்குப் பாதி அப்துல் ரஸாக் என்றோ அல்லது அதைப்போல ஒரு பெயரையோ சொல்லியிருந்தான் நடேஷ். அதுவேறு நினைவில் தங்காமல் அலைக்கழித்தது. நிறையக் குல்லாக்கள் குறுக்கும் நெடுக்குமாய் போய்வந்து கொண்டிருந்த மசூதி தெருவில் போய் பாய் கடை எது என்று எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. ‘இங்க லேமினேஷன்...
‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது’ என்பார்கள். அறிவு தனது கண்களைத் திறக்கும்போது, அறியாமையில் செய்யப்படும் தவறுகளும்,குற்றங்களும் நிறுத்தப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. ஒருவர் தனது அறிவினை பெருக்கிக் கொள்வது மட்டுமே அவரின் முறையான வளர்ச்சியாக கருதப்படும். அந்த...
பளிங்கு போன்ற நீலப்பச்சை நீர், தூய வெள்ளை மணற்பரப்பு, தென்னை மரங்கள் தலை சாய்ந்து பார்க்கும் கடற்கரை – இவைதாம் கல்பேனித் தீவின் அடையாங்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் அங்கு சென்றார் மோடி. அரபிக்கடலின் விளிம்பில், நாற்காலி போட்டு அமர்ந்து யோசித்தார், கருப்பு உடையில் வெள்ளை மணலில் கால் புதைய...