காஸாவில் பொது மக்கள் என்று யாருமில்லை; அங்கிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள்தாம் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஊர் உலகத்துக்காக இதனை மேலோட்டமாகக் கண்டித்துவிட்டு இஸ்ரேலியப் பிரதமர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார். உண்மையில் காஸாவில் இன்று நடந்துகொண்டிருக்கும்...
இதழ் தொகுப்பு November 8, 2023
ஹிட்லர், யூதர்கள் மீது நிகழ்த்திய கொடூரங்கள் ஈடிணை சொல்ல முடியாதவை என்ற நிலையை யூதர்கள் மாற்றியெழுதக்கூடும். இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையில் புதிய உச்சங்களைத் தொடுகிறது. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், பள்ளிகள், அகதி முகாம்கள் என எந்த வரையறையும் இன்றிக்...
04 – வெண்மையிலும் சிவந்த சோவியத் ரஷ்யா “அன்புள்ள லெனின் தாத்தாவிற்கு, நாங்கள் சமர்த்து மாணவர்களாகி விட்டோம். நன்றாகப் படிக்கிறோம், பிழையில்லாமல் எழுதுகிறோம். அழகான கலைப்பொருட்களைச் செய்கிறோம். முக்கியமாக தினமும் காலை குளிக்கிறோம். சாப்பிடும்முன் கைகளைக் கழுவுகிறோம். உங்களையும், எங்கள்...
75 இருக்கேன் பாவம். அகதிகள் எவ்வளவு பேர் வந்திருந்தாங்க? போய்ட்டு வந்தியே. எப்படி இருந்தது எக்ஸ்பீரியன்ஸ்? என்று ஆபீசிலும் டிரைவ் இன்னிலுமாக ஏகப்பட்ட விசாரிப்புகள். இன்னும் யாருமே வரவில்லை என்றதும் ஓரிருவரைத் தவிர அநேகமாக எல்லோருமே – வந்த முதல் அகதியே நீதான்னு சொன்னாரா நெடுமாறன் என்று...
76. இந்திராவுக்கு சிகிச்சை 1938 ஜனவரியில் டோலம்மா என்று இந்திராவால் செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்வரூபராணி உடல்நலக் குறைவால் மறைந்தார். அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஆனந்த பவனிலேயே வசித்த ஸ்வரூப ராணியின் சகோதரியும் மரணமடைந்தார். இந்திராவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் நேரு, “நம் குடும்பத்தின் ஒரு...
‘தீபஒளித் திருநாள்’ என்கிற தீபாவளிப் பண்டிகை உலகெங்கும் ஜாதி இன பேதமின்றிக் கொண்டாடப்பட்டாலும் தமிழர்களின் தீபாவளி மிகவே விசேடமானது. தீபாவளிக் கொண்டாட்டங்களின் பட்டியலில் இனிப்புகள், பட்டாசுகள், புதிய திரைப்பட வெளியீடுகள் ஆகியவற்றினும் மேலானதாக ஒருகாலத்தில் கோலோச்சியவை பிரபலப் பத்திரிகைகள்...
அமெரிக்காவின் இரு பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று ஜனநாயகக் கட்சி. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மிகப் பெரிய கட்சி, பழமையான கட்சி. உரிமையியல் (civil) போருக்குப்பின், தெற்குப் பகுதிகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை எதிர்த்த காரணங்களாலேயே வரவேற்பைப் பெற்ற கட்சி...
பஸ் நிறைந்து வந்தது. ஏறியதும் இஞ்சினுக்கு அருகில் சீட்டின் மீது சாய்ந்து வாகாக நின்று கொண்டேன். சூடாக இருந்தாலும் இதுதான் பாதுகாப்பான பகுதி. கால் மிதிபடாது. லஞ்ச் பேக்கையும் கைப்பையையும் இருக்கையில் சுகமாக உட்கார்ந்திருப்பவர்களிடம் கொடுத்தேன். தீபாவளி நெருங்குவதால், துணிமணி எடுப்பதற்காக டவுனுக்குக்...
காலை பதினொரு மணியிருக்கும். ரீட்டா தன் பாட்டியோடு உழுத நிலத்தில் கிழங்கு விதைகளைத் தூவிக் கொண்டிருந்தாள். சோவியத் தேசத்தின் வொல்கா நதிக் கரையில் அமைந்திருந்த செழிப்பான நிலமது. “பாட்டி, அதோ அங்கே பார்” வானத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இருவரும் நடுநடுங்கியபடி பின்னே செல்கிறார்கள். இனந்...
வீட்டிற்கு வீடு பலகாரங்களின் வாசம் வருகிறது என்றால் தீபாவளித் திருநாள் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். அந்த அளவுக்கு தீபாவளிப் பண்டிகையில் முக்கிய இடம் பிடித்திருப்பவை பலகாரங்கள்தாம். ஒருநாள் பண்டிகைதான் தீபாவளி. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன பலகாரங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு...