எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும் அதிரடியாகச் செயல்பட்டு ஒன்றிரண்டு தினங்களில் சுமார் இரண்டாயிரம் பேரைக் கைது செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய துறை, எத்தனை ஆயிரம் பேர் இதில்...
இதழ் தொகுப்பு May 17, 2023
இலங்கையை பௌத்தத் தூபிகளின் தேசமெனச் சொல்வார்கள். இந்தத் தீவின் எப்பகுதிக்குச் சென்றாலும் வானளாவிய தூபிகள் வியாபித்திருக்கும். இந்தத் தூபிகளின் தீவில் முதலில் தோன்றிய பௌத்த மடாலயம் எதுவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? இசுறுமுனியா விகாரையே இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் விகாரை. அநுராதபுரம் பௌத்த...
வங்கித் தலைவன் பொதுவாகப் பதவி உயர்வு என்றால் அதிகப் பொறுப்புகளும் அதற்கேற்ப அதிக வருமானமும் சேர்ந்தே வரும். ஆனால் அமெரிக்காவில் பார்க்ளேஸ் வங்கியின் உலகச் சந்தைகள் பகுதிக்குத் தலைவராக இருந்த வெங்கட் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் சுந்தரராஜன் வெங்கடகிருஷ்ணன் அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாகப்...
50 நிறைவு சிரித்தபடி, ‘நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்’ என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான். அவனை உட்காரச் சொல்லிவிட்டு, ‘ஒரு நிமிஷம்’ என்றபடி கடையின்...
அமெரிக்க அதிபர் தேர்தல் களேபரங்களுக்குச் சற்றும் குறையாத பரபரப்புடன் துருக்கி அதிபர் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் நடந்து ஓய்ந்திருக்கிறது. எழுபது ஆண்டுகாலப் பனிப்போரே ஒளிந்திருந்த இம்மாபெரும் தேர்தல் திருவிழாவில் அமெரிக்காவும், மேற்கு ஊடகங்களும் ஆறு கட்சிகளுடன் கலக்கல் கூட்டணி அமைத்த முன்னாள்...
கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை செய்ததிலிருந்து கூகுள் கொஞ்சம் அரண்டு போயிருக்கிறது. இந்தப் போட்டியை அது எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று அனைவரும் அந்த நிறுவனத்தின் வருடாந்திர...
51. காந்திஜியுடன் பிணக்கு இந்தியாவுக்கென்று பிரத்யேகமாக ஒரு சுயஆட்சிச் சாசனத்தை உருவாக்குவது என்பது மிகப் பெரிய சவால் என்பது நேரு கமிட்டியினருக்கும், காந்திஜி போன்ற முக்கியத் தலைவர்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்களுக்கு இருந்த சிறுபான்மை குறித்த பயம்தான்...
மனிதக் குடலில் வாழும் நுண்ணுயிரிகளின் தொகுப்பு (The Human Gut Microbiome) மனித நுண்ணுயிர்த் தொகுப்பு, குறிப்பாக மனிதனின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிர்களின் தொகுப்பு மற்றும் அதனுடன் இணைந்த மனித உடல்நலத்தின் மீதான ஆர்வம் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் கடந்தசில வருடங்களாக அதிகரித்து...
பதவியை விட்டு வெளியே போகும் ஒரு பிரதமர் அல்லது அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது உலக ஒழுக்கம். இங்கே அங்கே என்ற பாகுபாடின்றி எங்கும் நடப்பது; எப்போதும் உள்ளது. பாகிஸ்தான் ஒரு தனித்துவம் மிக்க தேசம் என்பதால் சும்மா குற்றம் சாட்டிக்கொண்டிராமல், முதற்கண் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள். அதன்...
தனது பசியைத் தணிக்கத் துரத்துகிற புலி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிற மான். ஓட்டம் நீளநீள இருவருமே களைப்படைகிறார்கள். தனது அந்தஸ்தைக் காப்பாற்றப் புலியும், உயிரைக் காத்துக்கொள்ள மானும் ஓடுவதை நிறுத்த முடியவில்லை. மானுக்கு தூரத்திலிருந்து ஆதரவுகள் திரள, களத்தில் இப்போது புலியும் மானும் மட்டும்...