Home » Archives for May 3, 2023

இதழ் தொகுப்பு May 3, 2023

நம் குரல்

கடலோரக் கவலைகள்

சில நாள்களுக்கு முன்னர் சென்னை கடற்கரையை ஒட்டிய நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்த மீன் கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தினரால் அப்புறப்படுத்தப்பட்டன. வழக்கம் போல எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்தன. பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர். மேலோட்டமான பார்வையில் இது ஒரு சிறிய, எளிய சம்பவம்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 23

23 பாபநாசம் சிவன்  (26.09.1890 – 01.10.1973) அறிமுகம் சில பாடல்கள் சாகாவரம் பெற்றவை. சான்றாக ‘கண்ணனைப் பணி மனமே’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஓ, அந்தப் பாடல் நீங்கள் அறியாததா..? போகட்டும்; ஏனெனில் அது இன்றைய கருநாடக மேடைப்பாடகர்களுக்கான பாடல்களில் ஒன்றாக இருப்பதால் அறிந்திருக்க...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 23

ஒரு புதிய வகைத் தடுப்பு மருந்து செயலிழக்கச் செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பாக்டீரியாவினைத்தான் சாதாரணமாக நோய்த் தடுப்பு மருந்து தயாரிக்கப் பயன்படுத்துவர். ஆனால் ஏப்ரல் 13, 2023 அன்று வெளியாகியுள்ள புகழ்பெற்ற ‘சயன்ஸ்’ பத்திரிக்கையில் (Science Journal) சற்று வித்தியாசமான முறையில் தயார் செய்யப்பட்ட...

Read More
தமிழ்நாடு

அரசியலும் ஆழப் போலிகளும்

தமிழ்நாடு மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோ துணுக்கைக் கடந்த வாரம் வெளியிட்டார். எப்போது பேசப்பட்டது, யாரிடம் பேசப்பட்டது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. சரியாகப் புரியாத அந்த ஆடியோவுக்கு அவர்களே ஆங்கில சப்-டைட்டிலும் போட்டிருந்தார்கள். தமிழ்நாடு முதல்வரின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 23

பணிவு முக்கியம் பொறியியல் மற்றும் மேலாண்மை அறிவியல் (Management Science) ஆகிய இரு துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற ஓரிளைஞர் தனது மூவாயிரத்தைந்நூறு டாலர்கள் பெருமதியான சொகுசுக் காரில் செல்கிறார். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீடு விற்பனைக்குப் போடப்பட்டிருப்பதைக் காண்கிறார். ஐந்து...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

நூலகத்தில் ஒரு ஜெனரல்

இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் புகழ்பெற்ற பண்டூரியா நாட்டில், ராணுவ செல்வாக்குக்கு எதிரான கருத்துகளைப் புத்தகங்கள் கொண்டிருந்தன என்கிற சந்தேகம், ஒரு நாள், ராணுவ உயர் அதிகாரிகளின் மனங்களில் உண்டானது. தவறுகளைச் செய்யவும் அழிவை உண்டாக்கவும் ஆன இயல்புடைய நபர்களே...

Read More
முகங்கள்

ஒரு புதையல் வேட்டைக் கதை

எங்கள் எள்ளுப்பாட்டி ஒருவர், எங்கள் கிராமத்துப் பூர்வீக வீட்டின் கீழே ஒரு புதையல் மறைந்திருப்பதாக தன் இறுதி நாள் வரையில் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். உண்மையோ, பொய்யோ… அந்த நேரத்து வறுமையைப் போக்கும் ஒரு ஃபேண்டஸி கனவோ தெரியாது. அந்த செவிவழிச் செய்தி எங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும்...

Read More
வெள்ளித்திரை

பொன்னியின் செல்வன் 2 – விமரிசனம்

நாவல் படித்து ரசித்த பலரும் ஒரு பிடி உப்புடன் தான் முதல்பாகத்தை அணுகினார்கள். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அத்தடைகள் குறைந்ததும் உண்மை. அதற்குப் பல காரணங்கள் – அதிகம் உறுத்தாத நடிகர் தேர்வு, கதையைத் தொடரப்போவதாகக் கட்டியம் கூறிய திரைக்கதை, இப்படி. ஆனால் இரண்டாம் பாகம் ஆரம்பம் –...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

மூக்கால் படிக்கலாம்!

ஒரு ஸ்மார்ட்போனும் இன்டர்நெட் இணைப்பும் மட்டுமே இருந்தால் போதும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடங்களை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கற்க முடியும். பெரும் பொருட்செலவு இல்லாமல். இச்சிறப்பான வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன டிஜிட்டல் தொலைநிலை வகுப்புகள். இவை “மூக்” (MOOC –...

Read More
உலகம்

நீதி கிலோ என்ன விலை?

‘ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸை அழைத்து வந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் மகா மூளையாய்ச் செயற்பட்ட நபர்களின் முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திடீரென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படித்தான் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியான போது கூட...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!