ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி – ஈசாவாஸ்ய உபநிடதம் ‘இறைவன் முழுமையானவன். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே...
இதழ் தொகுப்பு 3 weeks ago
சென்ற வாரம் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் லிபியாவுக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதென்னடா புதிய நல்லுறவு என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் லிபியாவுக்கும் அமெரிக்காவும் ஆதி முதல் ஏழாம் பொருத்தம் என்பது அண்ட...
நுவரெலியாவுக்குப் புதிதாக வருகிறீர்களா? உங்கள் கையில் இருக்க வேண்டியது சுற்றுலா விவரப் புத்தகமல்ல. கம்பராமாயணம். இங்கே ஒரு கோயில் இருக்கிறது. ‘சீதாஎலிய’ அம்மன் கோயில். நமக்கு முன்னால் – ராமாயண காலத்தில் ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் முன்னால் இலங்கைக்கு வந்தவளல்லவா சீதை? அந்தத் தொடர்பு...
பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரிய நாராயண சாத்திரி (1870 – 1903) ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த இந்தியத் தமிழ்நாட்டில் 1890’களில் ஓர் ஆண்டு அது. அக்காலத்தில் உயர்கல்வி கற்க தமிழகத்தில் சென்னையில் மூன்று கல்லூரிகள் மட்டுமே இருந்தன. சென்னை கிருத்தவக் கல்லூரி, மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என்ற...
ரேமண்ட் கார்வர் | தமிழில் : ஜி.குப்புசாமி சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத் தவிர...
நவநாகரிகத்தின் தலைவி ஷனெல் (Chanel) எனும் பெயர் உலகெங்கும் பிரபலமானது. ஆடம்பரமான பொருட்களை, முக்கியமாகப் பெண்கள் மத்தியில், விற்பனை செய்யும் பிராண்ட். இன்றைய நவநாகரிகத்தின் அடையாளங்களில் ஒன்று என்று சொல்லலாம். இது 1910-ம் ஆண்டு பிரெஞ்சு ஃபாஷன் டிசைனரான (Fashion designer) கோகோ ஷனெல் எனப்படும்...
நமது நாட்டில் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதெல்லாம் மிகவும் எளிதான செயல். நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி யாரைக் கைகாட்டுகிறதோ அவரே சபாநாயகர். ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல. பதினைந்து முறை வாக்களிக்க வேண்டும். விளையாட்டல்ல. உண்மையாகவே. ஏன் 15 முறை வாக்களிப்பு? எதனால் இத்தனை...
“நிலைமை கைமீறிப் போய்விட்டது. எல்லா சத்திர சிகிச்சைகளும் கால வரையறையின்றிப் பிற்போடப்படுகின்றன” தீயாய்ப் பரவுகிறது அந்தக் குறுஞ்செய்தி. பேராதனை போதனா மருத்துவமனையில் பணிப்பாளரின் கையொப்பத்துடன் ஊடகங்களில் பவனி வருகிறது அறிக்கை. ஏற்கனவே, கொதிக்கும் எண்ணெய்த் தாழியிலிருந்த தேசம்...
33 மண்ணும் மனிதர்களும் வாசலில் போய் நின்றதும் வாங்க வாங்க என்று வாய்நிறைய அழைத்தார் ஜீவா. அந்த நொடியே, எங்கோ முன்பின் தெரியாத இடத்திற்கு வந்திருக்கிறோமே என்று மனதில் இருந்த லேசான கிலேசமும் அகன்றுவிட்டது. படியேறி உள்ளே சென்றான். பெரியாரைப் போல தாடியுடன் கருப்புச்சட்டை அணிந்திருந்த பெரியவர் ஒருவர்...
நாற்பத்தி ஆறாவது சென்னை புத்தகக் காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த முறை சர்வதேசப் புத்தகச் சந்தையும் நடந்தது. இதை நடத்தியது தமிழ்நாடு அரசு. வழக்கமாக நடக்கும் புத்தகக்காட்சி, பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை மக்கள் கண்டு, தேர்ந்தெடுத்து வாங்குவதற்கானது. தமிழக அரசின் இந்த சர்வதேசப்...