Home » Archives for January 11, 2023

இதழ் தொகுப்பு 4 weeks ago

நம் குரல்

பேசுபொருளான ஆளுநர்

வழக்கமாக அரசியல்வாதிகள்தான் பேசுபொருளாவார்கள். ஆனால் இப்போதோ தமிழ்நாட்டின் ஆளுநர் பேசுபொருளாகிவிட்டார். காரணம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய ஆளுநர் உரையும் அதற்கு முன்பே அவர் பொதுவெளிகளில் பேசிய பேச்சுகளும். அவருடைய பேச்சுகளைப் பெரிதாகக் கண்டு கொள்ளாதவர்கள் கூட சட்டப்பேரவை நிகழ்வுக்குப்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 7

ஐபிஎம்மின் அதிகார மையம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், மேற்குக் கோதவரிப் பகுதியில் பிறந்தவர் அரவிந்த் கிருஷ்ணா. இவரது தந்தையார் இந்திய இராணுவ அதிகாரி. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மாற்றம் கிடைக்கும், நாட்டைக் காக்கும் தொழில். அதனால் இந்தியாவில் பல இடங்களில் வசிக்கும்...

Read More
உலகம்

ஈயம் பூசிய குடிநீர்

நீரின்றி வாழ்வில்லை. அதனால்தான் செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வாதாரத்துக்கான அடிப்படைத் தேவையான நீர் இருக்கிறதா என்று தேடுகிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள். நாம் வாழ்வது ஆறும் ஏரிகளும் தெளிந்த நீரோடைகளும் சூழ் உலகம் ஆனாலும் குடிக்கச் சுத்தமான குடிநீர் இல்லை என்ற புலம்பல்கள் சமீப காலமாக அதிகரித்து...

Read More
திருவிழா

பொங்குக!

அறுவடை நாள் கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பண்டிகைதான். பிப்ரவரி மாதத்தில் திராட்சைப் பழங்களை ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடும் விழாவாக அறுவடையைக் கொண்டாடுகிறது அர்ஜென்டைனா. அழகிப்போட்டியும் உண்டு. வீதி முழக்க மக்கள் குவிந்து திராட்சைப் பழத்தில் குளித்து மகிழும் இந்த விழா ஸ்பெயின்...

Read More
புத்தகக் காட்சி

விழாமல் நடக்கப் பழகுங்கள்!

46வது சென்னை புத்தகக் கண்காட்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இது சம்பிரதாயச் சடங்கு அல்ல. உண்மையில் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் அரசு. மொழி அழியாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ்மொழியின்...

Read More
விவசாயம்

வானும் மண்ணும் – சர்வதேச வேளாண் அறிவியல் மாநாடு

நமது மெட்ராஸ் பேப்பரின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர், செல்வ முரளி. இவர் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை சந்தித்து உரையாடியது ஊடகங்களில் பேசு பொருளானது . ஊடகங்களில் சிலர் இவரைக் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 7

நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் (1867 – 1911) அறிமுகம் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர் என்ற சிறப்புப் பெயர் ஒருவருக்கு உண்டு. 19’ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழ்ந்திருந்த அவர், இந்த சிறப்பை 20’ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்த்தினார். 1903 ! மதுரையில் நான்காம்...

Read More
சிறுகதை

லயம்

மார்கழி மாதக் கடுங்குளிரும், பனியும் மேட்டு லயத்தையும், லயத்தை அண்மித்து நின்ற மலைத் தொடர்களையும் முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. லயன் குடியிருப்புகளின் சில்லிடுகிற நிலத்தின் குளிர்ந்த தன்மை மாற சூரியன் வரவேண்டும். அதுவரை உடலை நடுக்குகின்ற குளிரை தாங்க முடியாது இருந்தது. மேட்டு லயத்தின் முன்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை

33. சிறையில் ஷாம்பெயின் சிறைத் தண்டனையோடு கூட 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் சிறை சென்றாலும், அபராதத் தொகையைக் கட்ட மறுத்து விட்டனர். ஆகவே, அரசாங்கத்தின் உத்தரவின்பேரில், அபராதத் தொகைக்கு ஈடாக, அவர்கள் வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வதற்காக...

Read More
சிறுகதை

பீத்தோவனின் சிம்ஃபொனி

புத்தாண்டின் பின்னிரவில் குறுமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாஷ‌ரண மடிவாளா மசிதேவா மேம்பாலத்தின் புராதனக் குண்டுக் குழிகளில் ஆக்டிவா நூற்று இருபத்தைந்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்களால் தூக்கப்பட்டேன். அவர்கள் என்றால் ஒரு வித வினோதர்கள். மூன்று பேர். என்னை விட உயரம் குறைவாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!