Home » Archives for January 4, 2023

இதழ் தொகுப்பு January 4, 2023

நம் குரல்

இருட்டறையில் உள்ளதடா உலகம்

கவிதா ராமு; புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர். வந்திதா பாண்டே; மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். இருவரும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அனைவரும் மனமுவந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த டிசம்பர் ஏழாம்தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான மனுநீதி நாள். அப்போது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 32

லக்னௌ சிறை பிரிட்டிஷ் அரசாங்கம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும், தொண்டர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சில காட்சிகளை அரங்கேற்றி, சகட்டுமேனிக்குச் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பிற்பகலில் அலகாபாத் ஆனந்த...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

வெறும் நுரை மட்டும்

எர்னாந்தோ தெய்யெஸ் | தமிழில்: ஆர் சிவகுமார் உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் பேசவில்லை. என்னிடமிருந்தவற்றில் மிகச்சிறந்த ஒரு சவரக்கத்தியை நான் தீட்டுவாரில் முன்னும் பின்னுமாகத் தீட்டி கூர்மையேற்றிக் கொண்டிருந்தேன். அவனை அடையாளம் கண்டுகொண்டபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை...

Read More
உலகம்

ஒதுங்க ஓர் இடம் வேண்டும்

உறைநிலைக்குக் கீழான வெப்பநிலையில், பண்டிகைக்காக எல்லாரும் கூடி இருக்கும் போது, பல பேருந்துகள் நிரம்பிவழிய எதிர்பாராத விருந்தினர்கள் வந்தால் நாம் அடையும் அதிர்ச்சிக்கே அளவில்லை. அதே வருபவர்கள் விருந்தினர்களாக அல்லாமல், வீடும் நாடும் இல்லாமல் பசியும் பஞ்சமும் நிறைந்த மனிதர்களாக இருந்தால் எப்படி...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 6

தரவுத் தளம் மனித உடலில் உள்ள மரபணுக்களைப் பற்றிப் பேசும்பொழுது அவை அமைந்துள்ள மரபணுத் தொகுப்பினைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா..? அப்படி என்னதான் இந்த மரபணுத் தொகுப்பில் உள்ளது..? வெறும் மரபணுக்கள் மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் விஷயங்கள் உள்ளதா..? இந்த மரபணுத் தொகுப்பினை அறிந்து...

Read More
சுற்றுலா

நுவரெலியா: இலங்கையில் ஓர் இங்கிலாந்து

மனிதர்கள் சில இடங்களில் வாழ்ந்துவிட நினைக்கிறார்கள். சிலர் வாழ்ந்தும் விடுகிறார்கள் அல்லது ஒவ்வொருவரும் வாழ விரும்பும் வாழ்க்கையைப் பார்க்கிறார்கள். அதன்பின் அந்த இடத்தைத் தாம் மரணிக்கும் வரை தம்முடனேயே கொண்டு செல்கிறார்கள். நான் நினைக்கிறேன்- அதிகளவில் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் அப்படி ஒவ்வொரு...

Read More
கோவிட் 19

கோவிட் புதிய அலை: வேகம் மிக அதிகம்

ஆங்கிலத்தில் இருக்கும் இருபத்தாறு எழுத்துகளைப் புரட்டிப் போட்டு புதுப்புது பெயர்களை விஞ்ஞானிகள் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு சவால் விடும் வகையில் புதிய உள் வகைகளாக மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கிறது கோவிட் 19 கொரானா வைரஸ். கோவிட் உள் வகை ஒமிக்கரான் வைரஸ் முதல் அலை உருவானது கடந்த...

Read More
புத்தகக் காட்சி

தகவல்கள், தகவல்கள், மேலும் சில தகவல்கள்

ஜனவரி 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக் காட்சி 2023 குறித்த – சாத்தியமான தகவல்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறோம். வாசகர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். முதல் முறையாகப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறோம். நல்ல...

Read More
சுற்றுலா

தேவை, இன நல்லிணக்கம்!

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு...

Read More
நுட்பம்

கூகுளை அசைத்துப் பார்க்கும் குட்டிச் சாத்தான்

கணினி உலகம் நாளுக்கு நாள் நான் வளர்கிறேனே மம்மி என்று வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு ஓய்வு நாளெல்லாம் கிடையாது.  இங்கே ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு பெரிய மாறுதல் வரும். கடந்த இரண்டாண்டுகளில் தாமதமான விஷயங்களை இந்தாண்டிலிருந்து (2023) எதிர்பார்கலாம். அவை யாவை? 5-ஜி இந்தாண்டு சகஜமாகிவிடப் போகிற...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!