Home » Archives for December 2022 » Page 2

இதழ் தொகுப்பு December 2022

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 5

இயற்கை செய்வது சரியா? தவறா? இந்தத் தொடரில் பல இடங்களில் மரபணுப் பிறழ்வு பற்றி ஆங்காங்கே பேசியிருக்கின்றோம். மரபணுப் பிறழ்வு என்றால் என்ன, மரபணுப் பிறழ்வு எவ்வாறு நோய்க்கு அல்லது ஒரு சிறந்த பண்பிற்குக் காரணமாகின்றது? கடந்த இதழில் ஒரு மரபணு எப்படி இருக்கும் என இரு உதாரணங்கள் பார்த்தோம் அல்லவா...

Read More
ஆண்டறிக்கை

புத்தக வருடம்

டிசம்பர் 31 இரவு வழக்கமாக நண்பர்களுடனும் ஜனவரி 1 காலை குடும்பத்தினர்களுடனும் கொண்டாட்டமாய்ப் புது வருடம் துவங்கும். 2022-ம் வருட தீபாவளிக்கு முதல் நாள் நவம்பர் ஒன்றாம் தேதி குழந்தைகளுக்குப் பட்டாசுகள் வாங்கச் சென்ற போது ஒரு சிறு விபத்தில் கை மணிக்கட்டு எலும்பு உடைந்து விட்டது. விபத்து சிறியது...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 30

30 நாடகம் கதவைத் திறந்த அம்மா, பேயைப் பார்த்தவளைப் போல மிரண்டுபோய், என்னடா இது என்றாள். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என்பதைப் போல, ‘நாடகம்’ என்று சொன்னபடி வீட்டிற்குள் நுழைந்தான். சட்ட பேண்ட்டெல்லாம் எங்கடா. வந்ததும் வராததுமா ஏன் பிராணனை வாங்கறே. அதான் வந்துட்டேன்ல என்றபடி...

Read More
நகைச்சுவை

சபத சங்கடங்கள்

புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பதெல்லாம் சரி தான். ஆனால் அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். எதற்காக நானுண்டு என் பொடி மசால் தோசை உண்டு என்று சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் என்னை வம்புக்கு இழுக்க வேண்டும்.? “இப்படி மசால் தோசையாகச் சாப்பிடுவது நல்லதில்லை. புத்தாண்டில் இருந்தாவது காய்கறி, பழங்கள் மட்டும்...

Read More
ஆண்டறிக்கை

புதிய நம்பிக்கை

2022க்கு ஓர அருஞ்சிறப்பு உண்டு. அது நூறாண்டுகளில் கண்டிராத ஒரு பெருந்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விடுவித்துக் கொண்டதைப் பார்த்தது. இந்தத் தலைமுறையினருக்கு கிடைத்த அரிதான உணர்வு இது. 2020 ஜனவரி வாக்கில் நான் அப்போது செய்து கொண்டிருந்த ஒரு திட்டச் செயலாக்கம் நிறைவை எட்டியது. சுமார் இரண்டாண்டுகள்...

Read More
ஆளுமை

விவசாயிகளுக்குச் செயலி; சுந்தர் பிச்சைக்கு நெல்லிக்கனி

கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையைக் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி டெல்லியில் சந்தித்து உரையாடினார், மெட்ராஸ் பேப்பரின் தொழில்நுட்ப ஆலோசகர் செல்வமுரளி. கடந்த வாரம் எங்கெங்கும் பேசப்பட்ட இச்சந்திப்பின் பின்னணியை முரளி நம்மிடம் விவரித்தார். கூகுள் நிறுவனமும், ஒன்றிய அரசின் தகவல்...

Read More
சமூகம்

ஆன்லைன் காலமும் ஆஃப்லைன் அனுபவங்களும்

இந்த வருடம் எப்படிக் கழிந்தது? இரண்டு வருட தொற்றுக்கால வீடடங்கல் முடிந்து கல்லூரிக்குச் சென்ற தலைமுறையினர் சிலரிடம் கேட்டோம்: வர்ஷா சரஸ்வதி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுத் துவக்கத்தில் எந்தவிதத் தீர்மானமும்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மைக்கண்ணாடி

ஜார்ஜ் லூயி போர்ஹே | தமிழில் : அச்சுதன் அடுக்கா தனது நாட்டை எகிப்திய வரி வசூலிப்பவர்களின் பேராசைக்கு ஒப்படைத்தவனும், 1842ஆம் வருடம் 14வது பார்மகாட் சந்திர தினத்தில் அரண்மனை அறையொன்றில் இறந்தவனுமான துஷ்டன் யாகப்தான் சூடானை ஆண்டவர்களில் கொடூரமானவன் என்பதை எல்லாச் சரித்திரமும் அறியும். மாந்திரீகன் அப்...

Read More
உலகம்

சிங்கப்பூர்: வானம் தொடும் வீட்டு விலை

தென்கிழக்காசிய நாடுகளில் ஒரு வியப்புக்குறி சிங்கப்பூர். உலகளாவிய பயணங்களைச் செய்தவர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மத்தியக் கிழக்கு நாடுகளிலும் பயணம் செய்தால் ஒரு எளிய உண்மையை உணர்ந்து வியக்கலாம். மேற்குலகு கொண்டிருக்கும் வேலை, அறிவு மற்றும் கல்விப்புல வாய்ப்புகளை, தென்கிழக்காசிய நாடுகளில்...

Read More
உலகம்

இலங்கை: போதுமடா சாமி!

2020, 2021ம் ஆண்டுகளைப் போலவே 2022-ம் ஆண்டிலும் கொரோனா வைரஸ் தேசத்தை முடக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால் கிருமிக்கு இலங்கையைப் பார்க்கப் பாவமாய் இருந்திருக்க வேண்டும். “எனது இன்னிங்ஸ், உம் நாட்டில் இத்தோடு முடிந்தது. மிச்சத் துன்பத்தை உன்னை ஆள்பவர்களே தருவார்கள்” என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!