Home » Archives for November 9, 2022

இதழ் தொகுப்பு 4 weeks ago

நம் குரல்

அரசியல் நாகரிகம் எங்கே போனது?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்’ என்ற பாரதியின் பாடல் வரிகள் இல்லாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பாரதி ஏன் பகைவனுக்கும் அருள வேண்டுமென்று சொன்னான்? ‘பகை...

Read More
வெள்ளித்திரை

நெட்ஃப்ளிக்ஸ் எப்படி ஜெயித்தது?

நெட்ஃப்ளிக்ஸ். தினமும் பார்க்கிறோம். நாம் மட்டுமல்ல. நூற்றித் தொண்ணூறு நாடுகளில் இருநூற்றி இருபத்தி ஒரு மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள ஓடிடி சானல் இது. இதன் பங்குகள் உலகளாவிய ஐடி நிறுவனங்களுக்கு இணையானது. உலகளவில் மிகப்பெரிய இன்டர்நெட் கம்பெனிகளில் ஒன்று. உலகின் இணைய அலைவரிசையில் 12.6...

Read More
நிதி

தேர்ந்தெடுத்துக் கடன் வாங்குங்கள்

கடன் கொடுப்பதற்கு எண்ணற்ற நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதிநிறுவன வங்கிகள், ஊரக வங்கிகள் என்று ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை மட்டும் நூற்றி முப்பத்தி ஏழு. பல அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளும் கடனை வாரி வழங்கத் தயாராக...

Read More
நிதி

எத்தனை எத்தனை கடன்களடா!

பெரும்பாலான மக்களுக்குத் வங்கிக்கடன்களில் தெரிந்தது தனிநபர் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன், தொழில் கடன், வாகனக் கடன், தங்கநகைக் கடன், சொத்துகள் மீதான கடன் போன்றவை. இவற்றில் நிறைய உட்பிரிவுகள் உள்ளன. மொத்தம் எத்தனைக் கடன்கள் உள்ளன, அவைகள் யாருக்கு கிடைக்கும்? அந்தக் கடன்கள் பெற தகுதிகள் என்ன...

Read More
நிதி

இஎம்ஐ – சில டிப்ஸ்

ஒருவரது வாழ்வில் அவர்களது பள்ளி / கல்லூரிக் காலங்களில் படிப்பிற்காக வாங்கப்படும் கல்விக் கடனில் தொடங்கும் இஎம்ஐ எனப்படும் மாதாந்திரத் தவணைத் திட்டம், அவர்களின் அடுத்த தலைமுறை வரை தொடர்ந்துகொண்டே இருக்கும். வேலை வந்ததும் கல்விக் கடனுடன் வண்டி வாகனம் வாங்கும் இஎம்ஐயும் சேரும். அதன்பின் திருமணம்...

Read More
ஆன்மிகம்

சித் – 24

24. அருளோடு கலத்தல் சித்தர்களின் பணியை மீண்டும் நினைவுகூர்கிறேன். மனித இனம் என்று ஆணவத்தில் உறைந்து நிற்கிறதோ அப்பொழுது அவர்கள் உருவாகி ஆணவத்தை வேரறுத்து மனித இனத்தை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லுகிறார்கள். சித்தர்களின் இத்தகைய பணிக்கு அவர்கள் எதையும் செய்யத் தயங்குவதில்லை. நோக்கம் மட்டுமே...

Read More
ஆளுமை

குறுங்கடன்களின் பரமபிதா

ஒரு காலத்தில் தொழில் தொடங்க – விரிவுபடுத்த, அசையா சொத்துக்களை பாதுகாப்பாகக் கொண்டு, மாத வருவாய்க்கு ஏற்ப மட்டுமே கடன் கொடுத்துக் கொண்டிருந்தன வங்கிகள். இவ்வகைக் கடன்களைப் பெற்று அனுபவித்தவர்கள் நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பினர்கள் மட்டுமே. வறுமையில் வாழும் கூலித் தொழிலாளிகள், ஒருவேளை...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 24

24 எப்படி  ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த ஆபீஸ் வேலை – மனதைச் செலுத்தாமல் சாமர்த்தியமாகச் செய்வது எப்படி என்கிற குறுக்கு வழிகள் கொஞ்சம்  கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியதும் – அடச்சே இது ஒரு விஷயமா என்கிற அளவிற்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிட்டது என்றாலும் அவன் எதிரில் நின்று பூதம்போல மிரட்டிக்கொண்டு...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 23

23. திறக்கட்டும் கதவுகள் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.8 கிமீ. அதற்கும் மேல் பயணிக்க இடமில்லை. சூப்பர் ஸ்டாரின் வாக்குப்படி “சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்றால் மனிதன் சென்ற அதிகபட்சத் தொலைவு மூன்று லட்சத்து எண்பத்து நாலாயிரத்து நாநூறு கிலோமீட்டர். இது பூமியிலிருந்து நிலவுக்கான...

Read More
புத்தகம்

டிராலி டிராலியாகப் புத்தகங்கள்!

வரவிருக்கும் ஜனவரி 2023ல் சென்னைப் புத்தகக் காட்சி, சர்வதேசப் புத்தகக் காட்சியாக நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். சர்வதேசப் புத்தகக் காட்சி என்றால் என்ன..? அது எப்படியிருக்கும்..? இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஷார்ஜா புத்தகக் காட்சிக்கு ஒரு விசிட் அடித்துத் தெரிந்து கொள்ளலாம். ஷார்ஜா...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!