Home » Archives for October 5, 2022

இதழ் தொகுப்பு October 5, 2022

உலகம் திருவிழா

அமெரிக்காவில் கொலு

கொலு ஒரு க்ளோபல் திருவிழா ஆகிவிட்டது. அமெரிக்காவில் நவராத்திரியும் தசராவும் இந்த ஆண்டு ஜோராகக் களைகட்டியது. மாநில ஆளுநர் முதல் பைடன் வரை வாழ்த்து சொன்னார்கள்.   நியுஜெர்சி ஆளுநர் மாளிகையில் அடுத்த வருடம் கொலு வைத்துவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது. அக்டோபர் வந்தாலே, அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாக...

Read More
நகைச்சுவை

பிரியாணி பக்கெட்டில் தேங்காய்ச் சட்னி : ஷார்ஜாவில் நடந்த அட்டூழியம்

வெளிநாட்டில் வசித்தாலும் நான் ஒரு சுத்தத் தமிழ் பெண். உண்மை, நம்புங்கள். தமிழ்க் கலாசாரத்தை தாங்கிப் பிடிக்க எவ்வளவு பாடுபடுகிறேன் தெரியுமா..? நானொரு தமிழ்ப் பெண் என்று காட்டிக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை விடுவதே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது. எனது பதினொரு ஆண்டு கால...

Read More
நுட்பம்

ஜன்னல் தமிழ்

முகமது-பின்-துக்ளக் சினிமாவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுல்தான் துக்ளக்காக வரும் சோ, அழகாகத் தமிழ் பேசுவார். திடுக்கிட்டு, “உங்களுக்கு எப்படித் தமிழ் தெரியும்..?” என்று கேட்டால், “என் காலத்திலேயே நான் ஓர் தமிழ் மேதாவி என எல்லோருக்கும் தெரியும்” என்று கிண்டலாகச் சொல்லுவார். அதுபோல...

Read More
விழா

‘நாளைய நட்சத்திரங்கள் இங்கிருந்தே உதிக்கும்!’

புக்பெட் ஆண்டு விழாக் கொண்டாட்டம் சரியாக ஓராண்டுக்கு முன்னர், இதே அக்டோபரில், காந்தி ஜெயந்தி நாளில்தான் பாராவின் Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்பு ஆரம்பமானது. இந்த ஓராண்டில் ஐந்து அணிகளாகச் சுமார் தொண்ணூறு மாணவர்கள் வந்து பயின்று சென்றிருக்கிறார்கள். பயின்று தேறியவர்களுள் சிலர் மெட்ராஸ்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 19

19 மானக்கேடு ரங்கனுக்கு ஒன்று அவன் அப்பன் துரைராஜுக்கு ஒன்று என – ஐசி பேப்பர்களை எழுதியபடியே – அவனையறியாமல் இடதுகையால் வறட்டு வறட்டென காலை சொறிந்துகொண்டதில், எப்போதும் வேர்வையாய்த் துளிர்க்கிற எக்ஸீமா ரத்தத்துளிகளாய் வெளிப்பட்டது. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் யானைக்கால் போல பாதம்...

Read More
நம் குரல்

காந்தி ஜெயந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலமா என்று தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. ஏன்? கொஞ்சம் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். ‘இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை...

Read More
வெள்ளித்திரை

பொன்னியின் செல்வன் – விமரிசனம்

பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு மக்கள்தொகையில் மிஞ்சிப் போனால் பத்திருபது சதவீதம் பேர்தான் படித்திருப்பார்கள். படிக்காதவர்கள்தான் பெரும்பான்மை. இப்படிப்பட்ட கதை படமாக்கப்படும்போது யாருக்காகப்...

Read More
உலகம்

ஈரானும் ஹிஜாபும்: இருண்ட கால நாட்குறிப்பு

கடந்த மூன்று வாரங்களாக ஈரான் கொதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது வரை (திங்கள் பிற்பகல் 02.30) தொண்ணூற்றிரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாற்பது நகரங்களில் போராட்டங்கள் உச்சம் பெற்றுள்ளன. இண்டர்நெட் சேவையை அரசு முடக்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கலவரம். எல்லாப்...

Read More
ஆன்மிகம்

சித் – 19

19. சம ஆதி சமாதி என்பது சித்தர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் என்பது நமக்குத் தெரியும். கடவுளைக் கும்பிடுவதை விட்டு இறந்த உடலைக் கும்பிடுவது சரியா என்று சிலர் வாதம் செய்வதைக் காண முடியும். சமாதி என்பது உடலை அடக்கம் செய்யும் இடம் எனக் கல்லறை போல நினைத்தால் அது...

Read More
உலகம்

பரலோகம் போகுமா பவுண்ட்ஸ்?

புதிய பிரிட்டிஷ் பிரதமராக லிஸ் டிரஸ் பதவி ஏற்ற இரண்டாவது நாளே எலிசபெத் ராணி பரலோகம் போய் விட்டார். உலகமே அதிர்ச்சி அடைந்தது. என் பாட்டி உயிரோடு இருந்திருந்தால் இவள் வந்த ராசி ராணி போயிட்டா என்று சொல்லியிருப்பார். நான் அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். இது ஒரு இயற்கையான சம்பவம். புதிய பிரதமரின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!