Home » Archives for October 2022

இதழ் தொகுப்பு 1 month ago

மழைக்காலம்

வெதர்மேன் மதிக்கும் வெதர்மேன் யார்?

இந்த வருடம் இங்கே மழை எப்படி இருக்கும்? வெதர்மேனைத் தொடர்புகொண்டு பேசினோம். தமிழகத்தில் இந்த ஆண்டு மழை எப்படியிருக்கும்..? அதிக மழை பெய்யும் என்கிறார்களே..? இந்திய வானிலை மையம் தமிழகத்திற்குக் குறிப்பிடும்படியான முன்னறிவிப்புக் கொடுக்கவில்லை. தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவமழை எண்பத்தாறு...

Read More
நம் குரல்

குண்டும் குழியும்

புதிய தலைமுறை பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன் என்னும் இதழாளர், மழை நீர் வடிகால் பகுதியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது நேற்றைய செய்தி. ஓராண்டில் ஒன்றிரண்டு முறையாவது ஆழ்துளைக் கிணறில் தவறி விழுவோர் குறித்த செய்தி வராதிருப்பதில்லை. பாதாள சாக்கடையில் தவறி விழுந்தவர்கள்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 22

22 கெளரவமாக வாழ்வது எப்படி? ஆபீஸ் கொஞ்சம் பழகிடுச்சி. ஆனாலும் என்னவோ மாதிரி இருக்கு.  புதுசா என்ன ப்ராப்ளம். ஹி ஈஸ் ஓகே சார்னானே சுகவனம்.  ஏசி கடி சின்னச் சின்னதா இன்னும் இருந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனாலும் பெருசா இல்லே. ஆனா ஆபீஸுக்குப் போறதே கடியா இருக்கு.  அதுக்கு யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது...

Read More
இலக்கியம் சிறுகதை

இராசேந்திர சோழனின் சாவி: என்ன செய்திருக்கிறார்? எப்படிச் செய்திருக்கிறார்? 

சாவி அவன் ரொம்ப மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் கேட்டுக் கொண்டான். எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிற வாய்ப்பு, சாவியில்லாமல் பூட்டு திறப்பது என்பதே ஒரு தனி கலைதான். ரொம்ப சுவாரஸ்யமான விஷயமும்கூட. ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோது நண்பர்களின் பெட்டியை இப்படியெல்லாம் திறந்தது. அப்புறம் எங்கே...

Read More
ஆளுமை

காலம்-காங்கிரஸ்-கார்கே

மல்லிகார்ஜூன் கார்கே 6825 வாக்குகள் வித்தியாசத்தில் சசி தரூரை வென்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக்விஜய் சிங், கேஎன் திரிபாதி மற்றும் சசிதரூர் எனப் பல பெயர்கள் அடிபட, கடைசிக்கட்டத்தில் களமிறங்கினார் மல்லிகார்ஜூன்...

Read More
வரலாறு முக்கியம்

பெய்வதும் செய்வதும்

இன்றைய பல நாடுகள் செவ்வாய்க்கும் நிலவுக்கும் கோள் அனுப்பி ஆராய்வதெல்லாம் அங்கு நீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதைக் கண்டறியத்தான். இந்த பூமிப் பந்திலும் நடக்கப் போகும் அடுத்த பெரும் சண்டை நீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஏனெனில் இந்த பூமியின் எந்த உயிரும் நிலை பெற்று...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 22

22. வந்தார் காந்தி மிதவாதப் பிரிவினரின் குரலாக ஒலித்து வந்தது, லீடர் தினசரி. அதன் நிர்வாகக் குழு தலைவரான மோதிலால் நேரு, மிதவாதிகளின் கருத்துகளுக்கு முழு ஆதரவு அளித்தார். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்தியர்களுக்குச் சுயஆட்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும், அதைச் செய்ய...

Read More
உலகம்

வரலாற்று வருடமும் வறுபடும் பிரிட்டனும்

புதிய பிரதமரும் பழைய சவால்களும் பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்கிறார். ஒரு விதத்தில் இது வரலாற்றுச் சம்பவம். 2022ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து பிரிட்டனில் ஏகப்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள் நடக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரம் அப்படி போலிருக்கிறது. முதலில் ராணியின் மரணம். அதைத் தொடர்ந்து...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 21

21. பொறுமை எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடமிருந்து அழைப்பு வருகிறது. தொலைபேசியில் எம்ஜிஆரே நேரடியாக ஜெயகாந்தனிடம், “நான் இன்று உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நேரில் வர முடியுமா..?” என்று கேட்கிறார். ஜெயகாந்தன் பதிலுக்கு, “இன்று இரவு ஏழு மணிக்கு நான் என்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 22

22. ஞானமும் பணமும் மா ஷீலா எழுதிய சுயசரிதைப் புத்தகத்தில் ஓஷோவைப் புகழ்வது போலும் சில அவதூறுகளை வாரியிறைத்துள்ளார். “ஓஷோ ஒரு திரைக்கதை ஆசிரியர். அவருடைய பாத்திரமாக நடித்த நடிகை நான். மிகவும் கடினமான பாத்திரம் எனக்குத் தரப்பட்டது. ஒரு துளையிட்ட மூங்கிலைப் போல அவர் தனது இசையை இசைக்க நான் என்னை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!